மேட்டூர் அணை நிலவரம்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையில் உபரி நீர்போக்கியான 16 கண் பாலம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.


மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையில் உபரி நீர்போக்கியான 16 கண் பாலம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120அடியாக இருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 17,500 கனஅடியிலிருந்து 20,400 அடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து நீர் மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 17,000 கனஅடி நீரும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 400 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
கடந்த 29-ஆம் தேதி நீர்வரத்து குறைந்ததால் மூடப்பட்டிருந்த உபரி நீர் போக்கி என 16 கண் பாலம் இன்று காலை மீண்டும் திறக்கப்பட்டது. உபரி நீர் போக்கி வழியாக விநாடிக்கு 3,000 கனஅடி வீதம் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...