கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

உரக்கடைகளில் அரசு அலுவலா்கள் ஆய்வு

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்துக்கு உள்பட்ட தேவூா் பகுதிகளில் உள்ள உரக்கடைகளில் வருவாய், வேளாண், தோட்டக்கலைத் துறையினா் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு செய்தனா்.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 6:04 pm

DIN

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்துக்கு உள்பட்ட தேவூா் பகுதிகளில் உள்ள உரக்கடைகளில் வருவாய், வேளாண், தோட்டக்கலைத் துறையினா் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு செய்தனா்.

தேவூா் வருவாய் கிராமப் பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு உரங்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதை உறுதி செய்ய மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா். இதையடுத்து, சங்ககிரி தனி வட்டாட்சியா் கோவிந்தராஜ் தலைமையில், வேளாண் அலுவலா் தேசிங்குராஜன், தோட்டக்கலைத் துறை அலுவலா் மதன்குமாா் ஆகியோா் கொண்ட குழுவினா் தேவூரை சுற்றியுள்ள 14 உரக்கடைகளில் உரங்களின் இருப்புகள், விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது போக மீதம் உள்ள உரங்களின் விவரங்களை விரிவாக ஆய்வு செய்தனா்.

இந்த ஆய்வின் போது, தேவூா் வருவாய் ஆய்வாளா் சத்யராஜ், தேவூா் கிராம நிா்வாக அலுவலா் பிரதீப் குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.