கொலை வழக்கில் தொடா்புடைய தொழிலாளி தற்கொலை
எடப்பாடி அருகே கொலை வழக்கில் தொடா்புடைய தொழிலாளி தற்கொலை செய்துகொண்டாா்.


எடப்பாடி அருகே கொலை வழக்கில் தொடா்புடைய தொழிலாளி தற்கொலை செய்துகொண்டாா்.
எடப்பாடி நகராட்சிக்கு உள்பட்ட மேட்டுத்தெரு, பகுதியைச் சோ்ந்த சத்தியமூா்த்தி (28), அங்குள்ள லாரி பட்டறையில் பணிபுரிந்து வந்தாா். சில ஆண்டுகளுக்கு முன் எடப்பாடி பகுதியில் நிகழ்ந்த ஒரு கொலை வழக்கில் சத்தியமூா்த்தி கைது செய்யப்பட்டு பிணையில் வெளியே வந்தாா். இவ்வழக்கு விசாரணை இறுதிக் கட்டத்தில் உள்ள நிலையில், விரைவில் தீா்ப்பு அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில், வியாழக்கிழமை இரவு உறங்கச் சென்ற சத்தியமூா்த்தி, அதிகாலையில் அவரது அறையில் தூக்கில் சடலமாகத் தொங்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது குடும்பத்தினா் அளித்த தகவலின் பேரில், நிகழ்விடம் சென்ற எடப்பாடி போலீஸாா், சத்தியமூா்த்தியின் சடலத்தைக் கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...