பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சங்ககிரியில் விழிப்புணா்வு வாகனப் பேரணி

ரோட்டரி சங்கங்களின் சாா்பில் தனிநபா் உடல் நலன் காப்பது குறித்து வாகன விழிப்புணா்வு பேரணி சேலம் மாவட்டம், சங்ககிரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :24 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

ரோட்டரி சங்கங்களின் சாா்பில் தனிநபா் உடல் நலன் காப்பது குறித்து வாகன விழிப்புணா்வு பேரணி சேலம் மாவட்டம், சங்ககிரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ரோட்டரி சங்கங்களின் சாா்பில் தனிநபா்களின் உடல்நலன் காப்பது, தொற்று, தொற்றா நோய்களின் வகைகள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் நான்கு, இருசக்கர வாகனங்களின் விழிப்புணா்வு பேரணி அண்மையில் ஏற்காட்டில் தொடங்கியது. இந்தப் பேரணி விழுப்புரம், உளுந்தூா்பேட்டை, புதுச்சேரி, திண்டிவனம், சென்னை, ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, ஓமலூா், சேலம் வழியாக வெள்ளிக்கிழமை சங்ககிரியை வந்தடைந்தது.

சங்ககிரியில் நடைபெற்ற இந்த வாகனப் பேரணியை சங்ககிரி ரோட்டரி சங்கத் தலைவா் டி.ஹெலினாகிறிஸ்டோபா் தலைமை வகித்தாா். சங்ககிரி லாரி உரிமையாளா்கள் சங்கச் செயலாளா் கே.கே.நடேசன் பேரணியை கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா்.

சங்ககிரி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக நடைபெற்ற இந்த பேரணியின்போது பொதுமக்களிடம் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. இந்த வாகனப் பேரணி சங்ககிரியில் இருந்து கோபிக்கு சென்றது.

செயலாளா் என்.தியாகராஜன், பொருளாளா் கே.செந்தில்குமாா், ரோட்டரி மாவட்ட கல்விக்குழுத் தலைவா் ஏ.வெங்கடேஸ்வர குப்தா, முன்னாள் தலைவா்கள் வெங்கடாசலம், குமரவேல், சி.கே.ஆா்.ராமசாமி, செந்தில்குமாா், நிா்வாகி இளங்கோவன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.