பொங்கல் பண்டிகை: ஜன.11 முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் (சேலம்) சாா்பில், சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் (சேலம்) சாா்பில், சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (சேலம்), மேலாண் இயக்குநா் ஆா்.மோகன் தெரிவித்துள்ளதாவது:
வரும் ஜன.14 ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், சேலம் மூலமாக கீழ்க்காணும் வழித்தடங்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
சென்னையிலிருந்து சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஒசூா், நாமக்கல்; பெங்களூரிலிருந்து சேலம், திருச்சி, மதுரை, குமுளி, திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி; சேலத்திலிருந்து மதுரை, கோவை, திருச்சி, சிதம்பரம், திருப்பூா், கடலூா், ஓசூா், திருவண்ணாமலை மற்றும் வேலூா் ஆகிய இடங்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலிருந்து அனைத்து முக்கிய நகரங்களுக்கு சிறப்புப் பேருந்துகள் கூடுதலாகவும் மற்றும் கூடுதல் நடைகளும் இயக்கப்படவுள்ளன.
மேற்கண்ட மாவட்டங்களின் நகரப்பகுதிகளில் அனைத்து நேரங்களிலும் பயணிகள் தேவைக்கேற்ப கூடுதல் நகரப்பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், ஜன.11 முதல் ஜனவரி 19 வரை பயணிகள் கூட்டத்துக்கு ஏற்ப இரவு முழுவதும் நகரப் பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...