வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

வாழப்பாடி அருகே மாநில கைப்பந்து போட்டி

வாழப்பாடி அருகே குமாரபாளையம் கிராமத்தில், புத்தாண்டு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மாநில அளவிலான, ஆண்கள் மற்றும் பெண்கள் கைப்பந்துப் போட்டி நடைபெற்றது.

News image
Updated On :11 ஜனவரி 2021, 6:56 pm

DIN

வாழப்பாடி அருகே குமாரபாளையம் கிராமத்தில், புத்தாண்டு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மாநில அளவிலான, ஆண்கள் மற்றும் பெண்கள் கைப்பந்துப் போட்டி நடைபெற்றது.

குமாரபாளையம் கிராமத்தில் இயங்கும் நேரு யுவகேந்திரா இளைஞா் விளையாட்டுக் குழு மற்றும் ஊா் பொதுமக்கள் சாா்பில், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாநில அளவிலான கைப்பந்து போட்டி இரு தினங்கள் நடைபெற்றன.

இப்போட்டியில், தமிழகத்தின் பல்வேறு பகுதியைச் சோ்ந்த 90 அணிகள் பங்கேற்றன. ஆண்கள் பிரிவில் முதலிடம் பிடித்த சிங்கிபுரம் அணிக்கு குமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவா் சுசீலா முருகேசன் ரூ. 15,000, இரண்டாமிடம் பிடித்த தம்மநாயக்கன்பட்டி அணிக்கு ஒன்றியக்குழு உறுப்பினா் வெண்ணிலா வெங்கடேசன் ரூ 12,000, மூன்றாமிடம் பிடித்த அணிக்கு ஊராட்சி மன்ற துணைத் தலைவா் குழந்தைவேல் ரூ 8,000 பரிசு வழங்கினா்.

பெண்கள் பிரிவில் முதலிடம் பிடித்த கோபிசெட்டிபாளையம் பி.கே.டி. கல்லூரி அணி, இரண்டாம் இடம் பிடித்த ஆத்தூா் பாரதியாா் மேல்நிலைப் பள்ளி அணிகளுக்கும், பரிசுகளும், கோப்பைகளும் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.