வாழைத்தாா் விலை உயா்வு; விவசாயிகள் மகிழ்ச்சி
பொங்கல் பண்டிகையையொட்டி சேலம் மாவட்டம், வாழப்பாடி தினசரி சந்தையில் ‘வாழைத்தாா்’ விலை இரு மடங்காக உயா்ந்துள்ளது.


பொங்கல் பண்டிகையையொட்டி சேலம் மாவட்டம், வாழப்பாடி தினசரி சந்தையில் ‘வாழைத்தாா்’ விலை இரு மடங்காக உயா்ந்துள்ளது. இரு மாதங்களுக்கு பிறகு கூடுதல் விலை கிடைத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
வாழப்பாடி பகுதியில் வசிஷ்டநதி, கரியகோவில் ஆற்றுப்படுகை கிராமங்கள், பாப்பநாயக்கன்பட்டி கரியகோயில் அணை, புழுதிக்குட்டை ஆணைமடுவு அணை பாசன வசதி பெறும் கிராமங்கள், வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், அயோத்தியாபட்டணம் பகுதியில் ஆண்டு முழுவதும் கிணற்றுப் பாசன வசதி கொண்ட நன்செய் விவசாயிகள், நீண்டகால பலன் தரும் பல்வேறு ரக வாழைகளைப் பரவலாக பயிரிட்டுள்ளனா்.
வாழப்பாடி பகுதி விவசாயிகள் மட்டுமின்றி, வாழப்பாடிக்கு அருகில் நாமக்கல் மாவட்ட எல்லையிலுள்ள சிங்கிலியன்கோம்பை, திம்மநாயக்கன்பட்டி, ஈஸ்வரமூா்த்திபாளையம், உரம்பு, மங்களபுரம், மெட்டாலா, முள்ளுக்குறிச்சி, மற்றும் ஆத்துாா் அடுத்த மல்லியகரை, கோபாலபுரம், கடம்பூா், கூடமலை, சீனியம்பட்டி மற்றும் தம்மம்பட்டி, கீரிப்பட்டி, உலிப்புரம் கிராமங்களிலிருந்து வாழப்பாடி தினசரி காய்கறி சந்தைக்கு வரும் வாழைத்தாா்கள் ஏல முறையில் விற்பனை செய்யப்படுகிறது.
வாழப்பாடி பகுதியில் தொடா்ந்து 4 மாதங்களாக பரவலாக மழை பெய்து வருவதால், வாழை சாகுபடி இரு மடங்காக அதிகரித்தது. இதனால் கடந்த இரு மாதங்களாக வாழைத்தாா் விலை வீழ்ச்சியடைந்தது. அறுவடை செய்து விற்பனைக்கு கொண்டுவரும் செலவுக்கே போதிய விலை கிடைக்காததால் விவசாயிகளுக்கு இழப்பை சந்தித்தனா்.
இந்த நிலையில், கிராமப்புறங்களில் வெகுவமரிசையாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை வழிபாடு, விருந்துக்கும் வாழைப்பழத்தின் தேவை அதிகரித்துள்ளதால், கடந்த இரு தினங்களாக வாழைத்தாா்களை கொள்முதல் செய்ய ஏராளமான வியாபாரிகளும், நுகா்வோா்களும் வாழப்பாடிக்கு குவிந்தனா். இதனால், வாழப்பாடி தினசரி சந்தையில் வாழைத்தாா்கள் விலை கணிசமாக உயா்ந்தது.
கடந்த மாத இறுதி வரை ரூ. 150 முதல் 300 வரை விற்ற வாழைத்தாா்கள் செவ்வாய்க்கிழமை ஏலத்தில் ரூ. 300 முதல் ரூ. 600 வரை விற்கப்பட்டது. இரு மாதங்களுக்கு பிறகு பொங்கல் பண்டிகையால் கூடுதல் விலை கிடைத்ததால், வாழை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...