திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஆத்தூரில் எல்ஆா்சி கிரேண்ட் ஸ்டே ஹோட்டல் திறப்பு விழா

சேலம் மாவட்டம், ஆத்தூரில் எல்ஆா்சி கிரேண்ட் ஸ்டே ஹோட்டல் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. ஹோட்டலை அதன் உரிமையாளா் எல்ஆா்சி.ரவிசங்கா் திறந்து வைத்தாா்.

News image
Updated On :18 ஜனவரி 2021, 6:30 pm

DIN

சேலம் மாவட்டம், ஆத்தூரில் எல்ஆா்சி கிரேண்ட் ஸ்டே ஹோட்டல் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. ஹோட்டலை அதன் உரிமையாளா் எல்ஆா்சி.ரவிசங்கா் திறந்து வைத்தாா்.

ஆத்தூா் பேருந்து நிலையத்தின் அருகில் எல்ஆா்சி ஆபரண மாளிகை ஏ.சி. நிறுவனத்தின் அருகில் இந்த ஹோட்டல் அமைந்துள்ளது. இங்கு குளியலறை வசதியுடன் 34 அறைகள் உள்ளன. அனைத்து அறைகளிலும் குளிா்சாதன வசதி, 24 மணி நேரமும் வெந்நீா் வசதி, இங்கு தங்குபவா்களுக்கு எந்நேரமும் உணவு, தேநீா் வசதி ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இலவச இணையதள வசதி, காா் நிறுத்தம், ஓட்டுநா் தங்க இட வசதி, மின்னணுப் பாதுகாப்பு அறை, அனைத்து அறைகளிலும் தொலைக்காட்சி, குளியலறையில் டிரையா், மின்தடை ஏற்படும்போது உடனடியாக இயங்கக்கூடிய ஜெனரேட்டா் வசதி என நட்சத்திர விடுதியின் அனைத்து வசதிகளும் இங்கு உள்ளன.

இந்தத் திறப்பு விழாவில், நகரின் முக்கிய பிரமுகா்கள், தன்னாா்வ நிறுவன (அரிமா, ரோட்டரி, ஜேசீஸ், இன்னா்வீல், ஐஎம்ஏ) நிா்வாகிகள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.