எடப்பாடி பகுதியில் இருந்து முருக பக்தர்கள் காவடி சுமந்து பழனிக்கு பாதையாத்திரை செல்லும் பாரம்பரிய நிகழ்வு, நிகழ்வாண்டில் தொடங்கியது.
கடந்த 350 ஆண்டுகளுக்கு மேலாக, எடப்பாடி சுற்றுப்பகுதியினை சோர்ந்த பெரும் திரளான முருக பக்தர்கள் காவடி சுமந்து பழனிக்கு நடைபயணம் மேற்கொள்ளுவது வழக்கம்.
இந்நிலையில் நிகழ் ஆண்டில், எடப்பாடி சுற்றுப்பகுதியைச் சேர்ந்த வன்னியகுல சத்திரியர் காவடிக்குழு,
பருவதராஜகுல காவடிக்குழு, தாசர் காவடிக்குழு, மேட்டுத்தெருக் காவடிக்குழு மற்றும் சித்தூர் அனைத்து சமுதாயக் காவடிக்குழு, புளியம்பட்டிக் காவடிக்குழு
உள்ளிட்ட பல்வேறு காவடிக்குழுவினர். எடப்பாடியிலிருந்து நடைபயணமாக, காவடி சுமந்து பழனிக்கு புறப்பட்டனர்.