பெட்ரோல் விலை உயா்வைக் கண்டித்து காங்கிரஸ் போராட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து சேலத்தில் பெட்ரோல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று, காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.


பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து சேலத்தில் பெட்ரோல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று, காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைகளைக் குறைக்காத மத்திய அரசை கண்டித்து, தமிழகம் முழுவதும் பெட்ரோல் நிலையங்கள் முன்பாக காங்கிரஸ் கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டம் மற்றும் கையெழுத்து இயக்கத்தை மேற்கொண்டனா். இதன் ஒரு பகுதியாக சேலம் வின்சென்ட் பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையம் முன்பாக சேலம் மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் பாஸ்கா் தலைமையில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல் வாங்க வரும் பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றனா். பொது மக்களும் ஆா்வத்துடன் பெட்ரோல் விலை உயா்வைக் கண்டித்து கையெழுத்திட்டனா். இதில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...