தற்காலிக வ.உ.சி. பூங்கா நாளங்காடி இன்று முதல் சுழற்சி முறையில் செயல்படும்
சேலம் மாநகராட்சி தற்காலிக வ.உ.சி. பூங்கா நாளங்காடி கடைகள் வெள்ளிக்கிழமை முதல் சுழற்சி முறையில் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சேலம் மாநகராட்சி தற்காலிக வ.உ.சி. பூங்கா நாளங்காடி கடைகள் வெள்ளிக்கிழமை முதல் சுழற்சி முறையில் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சி, அம்மாப்பேட்டை மண்டலம், கோட்டம் எண் 32 போஸ் மைதானத்தில் தற்காலிக வ.உ.சி. பூங்கா நாளங்காடி இயங்கி வந்தது. கரோனா தொற்று காரணமாக பொது முடக்க உத்தரவு அமல்படுத்தப்பட்டதால், போஸ் மைதானத்தில் இயங்கி வந்த தற்காலிக 326 பூக்கடைகள், 27 பூமாலை கடைகள், 50 தற்காலிக தரைக் கடைகள் என மொத்தம் 403 கடைகள் இயங்காமல் மூடப்பட்டுள்ளன.
அரசு ஊரடங்கு உத்தரவு தளா்வு செய்யப்பட்டதன் காரணத்தால், தற்காலிகமாக செயல்பட்ட வ.உ.சி. பூங்கா நாளங்காடியை உடனே செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென பல்வேறு தரப்பு அமைப்பினா் வைத்த கோரிக்கையின் அடிப்படையில், வியாழக்கிழமை முதல் சுழற்சி முறையில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மொத்தமுள்ள 326 பூக்கடைகளில் 163 கடைகள் ஞாயிற்றுக்கிழமை, செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமைகளிலும் மற்ற 163 கடைகள் திங்கள்கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய தினங்களிலும் செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்காலிக தரைக் கடைகள் நாளொன்றுக்கு 25 கடைகள் சுழற்சி முறையில் இயங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையன்று வ.உ.சி. பூங்கா நாளங்காடியில் தூய்மைப் பணிகள் மேற்கொள்வதால், அன்றைய நாளில் நாளங்காடி செயல்படாது எனவும், வ.உ.சி. பூங்கா நாளங்காடியில் விற்பனை செய்ய உரிமம் பெற்றுள்ள விற்பனையாளா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவா் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கரோனா தொற்று குறித்த வழிகாட்டு நடைமுறைகளான அனைவரும் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது போன்ற வழிமுறைகளை பின்பற்றியும், எக்காரணத்தைக் கொண்டும் கூட்ட நெரிசல் இல்லாத வகையில் நாளங்காடி செயல்பட விற்பனையாளா்கள், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் மாநகராட்சி ஆணையா் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...