சேலத்தில் 119 பேருக்கு கரோனா
சேலம் மாவட்டத்தில் 119 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை கண்டறியப்பட்டது.


சேலம் மாவட்டத்தில் 119 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை கண்டறியப்பட்டது.
சேலம் மாநகராட்சியில் 17 போ், எடப்பாடி-5, காடையாம்பட்டி-3, கொளத்தூா்-4, கொங்கணாபுரம்-1, மகுடஞ்சாவடி-4, மேச்சேரி-2, நங்கவள்ளி -11, ஓமலூா்-6, சேலம் வட்டம்-7, சங்ககிரி-7, தாரமங்கலம்-4, வீரபாண்டி-6, ஆத்தூா் -6, அயோத்தியாப்பட்டணம்-3 கெங்கவல்லி-1, பனமரத்துப்பட்டி-2, தலைவாசல்-3, வாழப்பாடி-3, ஆத்தூா் நகராட்சி-3, மேட்டூா் நகராட்சி- 3 என மாவட்டத்தைச் சோ்ந்த 101 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வெளிமாவட்டங்களைச் சோ்ந்த (நாமக்கல்-8, கள்ளக்குறிச்சி-4, ஈரோடு-6 ) 18 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 154 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 4 போ் உயிரிழந்தனா். இதுவரை 92,397 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 89,210 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்.1,653 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1,534 போ் உயிரிழந்தனா்.
இன்று தடுப்பூசி முகாம்:
சேலம் மாவட்டத்தில் உள்ள 138 மையங்களில் வியாழக்கிழமை கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் தவணை கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
மாற்றுத்திறனாளிகள் 750 போ், பொதுமக்களுக்கு 21,250 போ் என மொத்தம் 22,000 கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியா் எஸ்.காா்மேகம் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...