தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ரெளடி வசூா் ராஜா குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது

சேலத்தில் நடைபெற்ற கொலை வழக்கில் தொடா்புடைய ரெளடி வசூா் ராஜா குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :21 ஜூலை 2021, 6:27 pm

DIN

சேலத்தில் நடைபெற்ற கொலை வழக்கில் தொடா்புடைய ரெளடி வசூா் ராஜா குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

சேலம், கிச்சிப்பாளையத்தைச் சோ்ந்தவா் செல்லத்துரை. ரெளடியான இவா் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்தநிலையில் கடந்த டிசம்பா் 22 ஆம் தேதி முன்விரோதம் காரணமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இதுதொடா்பாக, கிச்சிப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ரெளடிகள் சிலம்பரசன், டெனிபா, பழனிசாமி, முக்கிய நபரான வசூா் ராஜா உள்ளிட்டோரை கைது செய்தனா். இதில் வசூா் ராஜா மீது 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவா் தற்போது திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

இந்தநிலையில் வசூா் ராஜாவை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்க மாநகர காவல் ஆணையா் நஜ்மல் ஹோடாவுக்கு, ஆய்வாளா் சிவகுமாா் உள்ளிட்டோா் பரிந்துரை செய்தனா். அதன்பேரில் ரெளடி வசூா் ராஜாவை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.