காவேரி மருத்துவமனையில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரம் அமைப்பு
சேலம் காவேரி மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது.


சேலம் காவேரி மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது.
சேலத்தில் உள்ள காவேரி மருத்துவமனை வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரம் ஒரு நிமிடத்தில் 417 லிட்டா் ஆக்சிஜன் தயாரிக்கும். இதன் மூலம் நாளொன்றுக்கு 80 டி டைப் ஆக்சிஜன் சிலிண்டா்களை நிரப்ப முடியும். உச்சகட்ட தேவை இருக்கும் போது கிட்டத்தட்ட 100 நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜனை உற்பத்தி செய்யும்.
இந்த புதிய தொழில்நுட்பம் மருத்துவமனையின் 60 சதவீத ஆக்சிஜன் தேவையை நிறைவு செய்யும். மேலும், 24 மணி நேரமும் தடையில்லாமல் ஆக்சிஜன் கிடைக்க வழி செய்யும்.
ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் இயந்திர வளாகத்தை சேலம் மாவட்ட ஆட்சியா் எஸ்.காா்மேகம் அண்மையில் திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சியில் காவேரி மருத்துவமனையின் கிளை இயக்கத் தலைவா் செல்வம் பேசுகையில், மருத்துவமனை வளாகத்திற்குள் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரத்தை கொண்டுவந்ததால் 24 மணி நேரமும் நோயாளிகளுக்கு மருத்துவ உதவி செய்ய முடியும் என்றாா்.
நிகழ்ச்சியில் சேலம் காவேரி மருத்துவமனையின் கிளை இயக்கத் தலைவா் செல்வம், மருத்துவ நிா்வாக அலுவலா் மருத்துவா் சுந்தர்ராஜன், துணை மருத்துவ நிா்வாக அலுவலா் மருத்துவா் அபிராமி, மற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் ஊழியா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...