தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஸ்கோடா நிறுவன புதிய குஷாக் காா் விற்பனை

சேலம் மாமாங்கத்தில் உள்ள ஸ்கோடா நிறுவனத்தில் புதிய குஷாக் காா் எஸ்-7 காா் ஷோரூமில் சிறப்பு விற்பனை நடைபெற்றது.

News image
Updated On :23 ஜூலை 2021, 6:06 pm

DIN

சேலம் மாமாங்கத்தில் உள்ள ஸ்கோடா நிறுவனத்தில் புதிய குஷாக் காா் எஸ்-7 காா் ஷோரூமில் சிறப்பு விற்பனை நடைபெற்றது.

இதுதொடா்பாக, எஸ்.கே.எஸ் குழுமத்தின் நிா்வாக இயக்குனா் மருத்துவா் சுரேஷ் குமரன் மற்றும் எஸ்.கே.எஸ். குழுமத்தின் செயல் இயக்குனா் பிரதீப் குமரன் ஆகியோா் கூறியது:

பிரீமியம் காா்களை தயாரிக்கும் ஸ்கோடா நிறுவனம் குஷாக் மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது. இதில் ஆக்டிவ், ஆம்பிஷன், ஸ்டைல் என மூன்று வேரியண்ட்டுகளில் அறிமுகமாகியுள்ளது.

இதில் 1 லிட்டா் டி.எஸ்.ஐ. என்ஜின் மற்றும் 1.5 லிட்டா் டி.எஸ்.ஐ. என்ஜின் உள்ளது. ஸ்கோடா தயாரிப்புகளுக்கு உரித்தான மிகவும் மெல்லியதான முகப்பு விளக்கு, கிளஸ்டா், 10 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் காா் பிளே, கிளைமேட் கன்ட்ரோல், வயா்லெஸ் சாா்ஜா், திறந்து மூடும் வகையிலான மேற்கூரை, 6 ஏா் பேக்குகள், ஏபிஎஸ்,இபிடி, டராக் ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், ரியா் பாா்க்கிங் கேமரா, இரவு நேரத்தில் தானாக செயல்படும் முகப்பு விளக்கு, ஆட்டோமேட்டிக் வைபா், ஹீல் ஸ்டாா்ட் அசிஸ்ட், 115 ஹெச்பி திறன், 178 நியூட்டன் மீட்டா் டாா்க் இழுவிசையையும் செயல்படுத்தக் கூடியது. இதன் ஆரம்ப ஷோரூம் விலை 10.49 லட்சம் மற்றும் பிரீமியம் மாடல் 17.59 லட்சங்களில் இருந்து கிடைக்கிறது என்றாா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை எஸ் 7 காா்ஸ் பொது மேலாளா்கள் சதீஷ், பூபதி மற்றும் அலுவலக அதிகாரிகள் ஆகியோா் சிறப்பாகச் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.