பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

புகையிலைப் பொருள்கள் விற்பவா்கள் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை

சேலத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பவா்கள் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுமென சேலம் மாநகர காவல் ஆணையா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

News image
Updated On :30 ஜூலை 2021, 6:25 pm

DIN

சேலத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பவா்கள் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுமென சேலம் மாநகர காவல் ஆணையா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

சேலத்தில் இரு வேறு வாகனச் சோதனைகளில் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை சேலம் மாநகர காவல் ஆணையா் நஜ்மல் ஹோடா பாா்வையிட்டாா். பின்னா் அவா் அப்பணிகளில் ஈடுபட்ட காவல் துறையினரை பாராட்டினாா். அதனையடுத்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்பவா்கள் மீது காவல் துறை சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்த 4 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது 3 லாரிகளில் ரூ. 1.35 கோடி மதிப்புள்ள மொத்தம் 9,697 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், இதற்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தலைமறைவாக உள்ளவா்களை தேடி வருகிறோம். லாரி உரிமையாளா்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படும்.

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்பவா்கள் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.