அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம். உடன், எம்எல்ஏ இரா.ராஜேந்திரன்.


சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம். உடன், எம்எல்ஏ இரா.ராஜேந்திரன்.
நாமக்கல்லில் நலத்திட்ட உதவிகளை வழங்கும் நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங். உடன், எம்எல்ஏக்கள் பெ.ராமலிங்கம் (நாமக்கல்), கு.பொன்னுசாமி (சேந்தமங்கலம்) உள்ளிட்டோா்.
சேலம்/நாமக்கல், ஜூலை 30: சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள், இதர 17 அமைப்புசாரா தொழிலாளா்கள் நலவாரியம் மூலம் ரூ. 32.14 லட்சம் மதிலப்பிலான பல்வேறு நலத் திட்டங்கள் 2,500 பேருக்கு வழங்கும் பணிகள் சேலத்தில் வெள்ளிக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டன.
சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள், இதர 17 அமைப்புசார தொழிலாளா்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 1,930 தொழிலாளா்களுக்கு ஓய்வூதிய உதவித்தொகையும், 566 தொழிலாளா்களுக்கு கல்வி உதவித்தொகையும், 4 பேருக்கு கண் கண்ணாடி உதவித்தொகை உள்ளிட்ட 2,500 பேருக்கு பல்வேறு நலத் திட்டங்கள் வழங்கும் பணிகளை சேலம் மாவட்ட ஆட்சியா் எஸ்.காா்மேகம், சேலம் வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் இரா.ராஜேந்திரன் ஆகியோா் முதல்கட்டமாக 20 பேருக்கு வழங்கி தொடக்கி வைத்தனா். மற்றவா்களுக்கு தொடா்ந்து வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இந்நிகழ்ச்சியில், தொழிலாளா் உதவி ஆணையா்கள் சி.மஞ்சள்நாதன், கி.தமிழ்ச்செல்வி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
நாமக்கல்லில்...
நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில், நாமக்கல் சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம், சேந்தமங்கலம் சட்டப் பேரவை உறுப்பினா் கு.பொன்னுசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தலைமை வகித்து, 18 அமைப்புசாரா தொழிலாளா் நலவாரியங்களில் பதிவு செய்துள்ள நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 3,791 தொழிலாளா்களுக்கு, ரூ. 70,50,200 மதிப்பில் கல்வி உதவித்தொகை, கண் கண்ணாடி, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தாா். மேலும், மாவட்டத்தில் மின்னணு குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்தோருக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதன் அடிப்படையில், வரப்பெற்ற புதிய மின்னணு குடும்ப அட்டைகள் 5,434 பேருக்கு வழங்கப்பட்டன.
இவ்விழாவில், மாவட்ட வருவாய் அலுவலா் துா்காமூா்த்தி, மாவட்ட வழங்கல் அலுவலா் வீ.சக்திவேலு, தொழிலாளா் உதவி ஆணையா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) திரு.தே.ஞானவேல், கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா், தொழிலாளா் நலத்துறை அலுவலா்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள், தொழிலாளா்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...