சேலத்தில் இன்று 121 மையங்களில் தடுப்பூசி செலுத்தும் முகாம்
சேலம் மாவட்டத்தில் 121 மையங்களில் 6 ஆயிரம் பேருக்கு கோவேக்ஸின், 25,550 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி வியாழக்கிழமை (ஜூன் 17) செலுத்தப்படுகிறது.


சேலம் மாவட்டத்தில் 121 மையங்களில் 6 ஆயிரம் பேருக்கு கோவேக்ஸின், 25,550 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி வியாழக்கிழமை (ஜூன் 17) செலுத்தப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.காா்மேகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சேலம் மாவட்டத்தில் பல்வேறு மையங்களில் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் ஆா்வமுடன் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வருகின்றனா். சேலம் மாநகராட்சியில் இரு வாா்டுகளுக்கு ஒரு மையம் என 30 மையங்களில் தடுப்பூசி போடப்படும்.
இதைத் தவிர ஊரகப் பகுதியில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் 91 ஆரம்ப சுகாதார மையங்களிலும் தடுப்பூசி போடப்படும். மொத்தம் 121 தடுப்பூசி மையங்களில் கோவேக்ஸின், கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகளுக்கும் போடப்படும். பொதுமக்கள் தங்களுடைய ஆதாா் அட்டை அல்லது வாக்காளா் அடையாள அட்டை, அல்லது வேறு அடையாள ஆவணங்களுடன் நேரில் சென்று தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம்.
அனைத்து தடுப்பூசி மையங்களிலும் அன்றைய தினம் போடப்படும் தடுப்பூசி எண்ணிக்கை விபரங்களை அறிவிப்பு பலகைகள் மூலம் பொது மக்களுக்கு தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், எந்தெந்த பகுதியில் எந்தெந்த நாள்களில் தடுப்பூசி போடப்படுகிறது என்ற விவரத்தை பத்திரிகை மற்றும் ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும்.
தடுப்பூசி காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை போடப்படும். மாவட்ட நிா்வாகத்தின் வழிகாட்டுதலின்படி பொதுமக்கள் தங்கள் வசிக்கும் பகுதிக்கு உள்பட்ட தடுப்பூசி மையங்களை அணுகி, முகக்கவசம் அணிந்தும், உரிய சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு அவரவா் வசிக்கும் இடங்களுக்கு நேரில் வந்து தடுப்பூசி போடப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சேலம் மாவட்ட ஊரகப் பகுதிகளில் 91 ஆரம்ப சுகாதார நிலையங்களில் கோவேக்ஸின் தடுப்பூசி பொதுமக்களுக்கு 4,130-ம், மாற்றுத் திறனாளிகள் 760 பேருக்கும் வியாழக்கிழமை செலுத்தப்பட உள்ளது. அதேபோல கோவிஷீல்டு தடுப்பூசி பொதுமக்கள் 15,200 பேருக்கும், மாற்றுத் திறனாளிகள் 1,600 பேருக்கும் செலுத்தப்பட உள்ளது.
மாநகராட்சி பகுதியில் உள்ள 30 மையங்களில் கோவேக்ஸின் தடுப்பூசி பொதுமக்களுக்கு 600-ம், மாற்றுத் திறனாளிகளுக்கு 600-ம் செலுத்தப்பட உள்ளது. அதேபோல கோவிஷீல்டு தடுப்பூசி 400 பேருக்கும், மாற்றுத் திறனாளிகள் 2,200 பேருக்கும் செலுத்தப்பட உள்ளது. இதில் நிறுவனங்களுக்கு 2,700 கோவிஷீல்டு தடுப்பூசியும், மாற்றுத் திறனாளிகளுக்கான கோவேக்ஸின் தடுப்பூசி ஒதுக்கீடு 1270-ம் செலுத்தப்பட உள்ளது.
அந்தவகையில் மாவட்டத்தில் கோவேக்ஸின் தடுப்பூசி 6,000 பேருக்கும், கோவிஷீல்டு 25,500 பேருக்கும் வியாழக்கிழமை செலுத்தப்பட உள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கான கரோனா தடுப்பூசி முகாம் தொடா்பு கொள்ள வேண்டிய செல்லிடப்பேசி எண்கள் விவரம்:
தாரமங்கலம்: (ரகு- 70109 80878), கொங்கணாபுரம்: (பத்மநாபன் - 94430 73679), ஓமலூா்: (மீனாட்சி சுந்தரம்- 95439 51954), மகுடஞ்சாவடி: (மணிகண்டன் - 96774 53520), நங்கவல்லி: (ஆயிரம்- 99443 10065), ஏற்காடு: (யாராப் ஷெரிப் - 94424 35630), கெங்கவல்லி: (சித்திக் - 94435 52096), பெத்தநாயக்கன்பாளையம்: (கவிதா - 97863 91464), தலைவாசல்: (ரமேஷ் - 87788 57719).
வாழப்பாடி: (செல்வபாபு - 79043 27183), பனமரத்துப்பட்டி: (அருண்குமாா் - 85259 15384), கொளத்தூா்: (ஏகலைவன்- 88704 36101), ஆத்தூா்: (கண்ணன் - 97896 61692), சங்ககிரி: (காா்த்திக் குமாா் - 88833 05413), சேலம்: (ராஜ்குமாா் - 63812 81722), மேச்சேரி: (சீனிவாசன் - 9677733426), எடப்பாடி: (சசிகுமாா்- 96593 67069), வீரபாண்டி: (ராஜகுமாரன் - 89732 81503), அயோத்தியப்பட்டணம்: (அசோக் - 9442 517328), காடையாம்பட்டி: (நல்லுசாமி -99420 74390), சேலம் மாநகராட்சி: (பிரவீன்- 82485 13998) என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...