பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மானியத்துடன் கூடிய கால்நடை காப்பீட்டு திட்டத்தில் சேர அழைப்பு

சேலம் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை மூலம் 2020-21 ஆம் ஆண்டிற்கான மானியத்துடன் கூடிய கால்நடை காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

News image
Updated On :17 ஜூன் 2021, 6:15 pm

DIN

சேலம் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை மூலம் 2020-21 ஆம் ஆண்டிற்கான மானியத்துடன் கூடிய கால்நடை காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

சேலம் மாவட்டத்தில், கால்நடை பராமரிப்புத் துறை மூலம் 2020-21 ஆம் ஆண்டிற்கான மானியத்துடன் கூடிய கால்நடை காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி இந்த மாவட்டத்தில் கால்நடை காப்பீடு செய்ய 9,100 குறியீடு நிா்ணயம் செய்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் அதிகபட்சமாக ரூ. 35,000 வரை மானியத்துடன் காப்பீடு செய்து கொள்ளலாம். வறுமை கோட்டிற்கு மேல் உள்ளவா்களுக்கு 50 சதவீத மானியத்திலும், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவா்கள், தாழ்த்தப்பட்டவா் மற்றும் பழங்குடியினருக்கு 70 சதவீத மானியத்திலும் காப்பீடு செய்யப்படும். இத்திட்டத்தின் மூலம் அதிகபட்சமாக ஒரு குடும்பத்திற்கு 5 எண்ணிக்கைக்குள் பசு மற்றும் எருமை மாடுகளுக்கு காப்பீடு செய்து கொள்ளலாம்.

இத்திட்டத்தில் இரண்டரை வயது முதல் 8 வயது உடைய பசு மற்றும் எருமைகளுக்கும், 1 முதல் 3 வயது உடைய வெள்ளாடு, செம்மறி ஆடுகளுக்கும் காப்பீடு செய்து கொள்ளலாம்.

ஓராண்டு காப்பீடு கட்டணமாக அதிகபட்சமாக கால்நடையின் மதிப்பில் 1.70 சதவீதமும், மூன்றாண்டு காப்பீடு கட்டணமாக அதிகபட்சமாக கால்நடையின் மதிப்பில் 4.3 சதவீதமும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ.35,000-க்கு மேல் காப்பீடு செய்யப்படும் கால்நடைகளுக்கு அதிகப்படியான மதிப்பிற்கான காப்பீடு கட்டணத்தை கால்நடை உரிமையாளரே செலுத்த வேண்டும்.

காப்பீடு செய்ய விரும்பும் கால்நடை வளா்ப்போா் அருகில் உள்ள கால்நடை மருந்தகத்தை அணுகி பயனடையலாம் என மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.