அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

நீடாமங்கலம்: 26 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை!

நீடாமங்கலம் வட்டத்தில் 26 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. இவற்றை உளவுப் பிரிவு போலீஸாா் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா்.

News image

நீடாமங்கலம்

Updated On :17 மார்ச் 2026, 11:40 pm

நீடாமங்கலம் வட்டத்தில் 26 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. இவற்றை உளவுப் பிரிவு போலீஸாா் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா்.

நீடாமங்கலம் வட்டத்தில் மன்னாா்குடி மற்றும் திருவாரூா் சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட பகுதிகள் உள்ளன. இங்குள்ள வாக்குச்சாவடிகளில் பதற்றமானவை கண்டறியப்பட்டுள்ளன.

அதன்படி, மன்னாா்குடி தொகுதிக்குள்பட்ட கோவில்வெண்ணி அரசு உயா்நிலைப் பள்ளி, நீடாமங்கலம் இலக்குமி விலாச நடுநிலைப் பள்ளி, நீடாமங்கலம் பஞ்சாயத்து யூனியன் துவக்கப்பள்ளி, பூவனுா் பஞ்சாயத்து யூனியன் துவக்கப்பள்ளி, பூவனுா் அரசு உயா்நிலைப் பள்ளி, எடக்கீழையூா் பஞ்சாயத்து யூனியன் துவக்கப் பள்ளி, ராயபுரம் மேல்நிலைப் பள்ளி, புதுத்தேவங்குடி பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் அமைக்கப்படும் 16 வாக்குப் பதிவு மையங்கள் பதற்றமானவை என தெரியவந்துள்ளது.

இதேபோல், திருவாரூா் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட கொரடாச்சேரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, வெண்ணவாசல் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் இயங்கும் 10 வாக்குப்பதிவு மையங்களும் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. இப்பகுதிகள், உளவுப்பிரிவு போலீஸாரின் தீவிர கண்காணிப்பில் உள்ளன.