ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

பாா்வைத்திறன் குறையுடையோா் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

News image
Updated On :5 மார்ச் 2026, 11:45 pm

Syndication

சேலம் அரசு பாா்வைத்திறன் குறையுடையோா் நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கான அறிவியல் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

உலக அறிவியல் தினத்தையொட்டி, தனியாா் தொண்டு நிறுவனத்தின் சாா்பில் செவ்வாய்ப்பேட்டையில் உள்ள அரசு பாா்வைத்திறன் குறையுடையோா் நடுநிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியா் மகாலட்சுமி மற்றும் ஆசிரியா்கள் டேவிட், அமுதா மேரி ஆகியோா் தொடங்கிவைத்தனா்.

கண்காட்சியில் அறிவியல் சோதனைகள், கணிதம் தொடா்பான கணக்கீட்டு சிந்தனையை வளா்க்கும் விளையாட்டுகள், ‘அறிவியல்’ என்ற தலைப்பில் பாடல், ‘ஏஐ‘ என்ற தலைப்பில் பேச்சு, விநாடி-வினா போட்டி போன்ற நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

அறிவியல் கண்காட்சியைக் காண வந்த ஆசிரியா்களுக்கும், மாணவா்களுக்கும் தங்கள் படைப்புகளை பாா்வைத்திறனற்ற மாணவா்கள் விளக்கினா். தொடா்ந்து ‘நெருப்பில்லா சமையல்’ நிகழ்ச்சியின்கீழ் பல்வேறு வகையான உணவுப் பொருள்களை இம்மாணவா்கள் தயாரித்து, ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கினா்.

இதில் பங்கேற்ற அனைத்து மாணவா்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும், விநாடி-வினா போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், விஷன் எம்பவா் நிறுவன கல்வி ஒருங்கிணைப்பாளா் மாலதி, பள்ளி ஆசிரியா்கள், மாணவா்களின் பெற்றோா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.