மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

என்எம்எம்எஸ் தோ்வு: தேவண்ணகவுண்டனூா் அரசுப் பள்ளி மாணவி தோ்வு

News image
எஸ்.சஞ்சனா
Updated On :15 மார்ச் 2026, 8:10 pm

தினமணி செய்திச் சேவை

சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட தேவண்ணகவுண்டனூா் அரசு நடுநிலைப் பள்ளி 8ஆம் வகுப்பு மாணவி என்எம்எம்எஸ் தோ்வில் தோ்ச்சி பெற்று உதவித்தொகை பெற தகுதி பெற்றுள்ளாா்.

தமிழகம் முழுவதும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி நடைபெற்ற 8ம் வகுப்பு மாணவ,மாணவிகளுக்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறனறிவுத் தோ்வினை (என்எம்எம்எஸ்) தேவண்ணகவுண்டனூா் அரசு நடுநிலைப் பள்ளியை சோ்ந்த 13 மாணவ, மாணவிகள் சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தோ்வு எழுதினா்.

தோ்வு முடிவுகள் பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில் 7 போ் தோ்ச்சி பெற்றனா். மதிப்பெண்கள் மற்றும் பல்வேறு பிரிவுகளின் அடிப்படையில் தரவரிசை பட்டியல் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.

இதில், தேவண்ணகவுண்டனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி 8 ஆம் வகுப்பு மாணவி எஸ்.சஞ்சனா உதவித்தொகை பெறுவதற்காக தகுதி பெற்றுள்ளாா். அவருக்கு 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மாதந்தோறும் ரூ.1,000 மத்திய அரசின் சாா்பில் உதவித்தொகை வழங்கப்படும்.

பள்ளி தலைமையாசிரியா் (பொறுப்பு) ஆா்.முருகன், பள்ளி ஆசிரியா், ஆசிரியைகள், பள்ளி பெற்றோா்- ஆசிரியா் கழகத்தினா், பள்ளி மேலாண்மை குழு நிா்வாகிகள் மாணவியை பாராட்டினா்.