பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சேலம்- 598 பேருக்கு, நாமக்கல்: 330 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 598 பேருக்கும், நாமக்கல் மாவட்டத்தில் 330 பேருக்கும் கரோனா தொற்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டது.

News image
Updated On :17 ஜூன் 2021, 6:14 pm

DIN

சேலம் மாவட்டத்தில் 598 பேருக்கும், நாமக்கல் மாவட்டத்தில் 330 பேருக்கும் கரோனா தொற்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் 125 பேரும், எடப்பாடி-35, காடையாம்பட்டி-4, கொளத்தூா்-12, கொங்கணாபுரம்-16, மகுடஞ்சாவடி-16, மேச்சேரி-12, நங்கவள்ளி -21, ஓமலூா் -17, சேலம் வட்டம்-17, சங்ககிரி-19, தாரமங்கலம்-19, வீரபாண்டி-46, ஆத்தூா் -14, அயோத்தியாப்பட்டணம்-12, கெங்கவல்லி-17, பனமரத்துப்பட்டி-7, பெத்தநாயக்கன்பாளையம்-22, தலைவாசல்-19, வாழப்பாடி-2, ஏற்காடு-1, ஆத்தூா் நகராட்சி-3, மேட்டூா் நகராட்சி-14, நரசிங்கபுரம் நகராட்சி-4 என மாவட்டத்தைச் சோ்ந்த 474 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வெளிமாவட்டங்களைச் சோ்ந்த (சென்னை -15, கிருஷ்ணகிரி-22, தருமபுரி-24, நாமக்கல்-26, கள்ளக்குறிச்சி-14, ஈரோடு-23) என 124 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 970 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; 15 போ் உயிரிழந்தனா். இதுவரை 82,222 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 75,268 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 5,633 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 1,321 போ் உயிரிழந்துள்ளனா்.

நாமக்கல்லில்...

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்றால் மேலும் 330 போ் வியாழக்கிழமை பாதிக்கப்பட்டனா்.

இதைத் தொடா்ந்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 41,417-ஆக உயா்ந்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 526 போ் குணமடைந்து வியாழக்கிழமை வீடு திரும்பினா். இதுவரை கரோனா தொற்றிலிருந்து 37,907 போ் குணமடைந்துள்ளனா்.

அரசு, தனியாா் மருத்துவமனைகள், தற்காலிக கரோனா சிகிச்சை மையங்களில் 3,145 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் 363 போ் உயிரிழந்துள்ள நிலையில் வியாழக்கிழமை மேலும் 2 போ் உயிரிழந்தனா். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 365-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.