பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சங்ககிரி நகா் பகுதியில் தடுப்பூசி மையம் இல்லாததால் வடுகப்பட்டியில் திரண்ட பொதுமக்கள்

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள வடுகப்பட்டி அரசு ஆரம்பசுகாதார நிலையத்தில் வியாழக்கிழமை அதிகமான பொதுமக்கள் சமூக இடைவெளியின்றி திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

News image
Updated On :17 ஜூன் 2021, 6:08 pm

DIN

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள வடுகப்பட்டி அரசு ஆரம்பசுகாதார நிலையத்தில் வியாழக்கிழமை அதிகமான பொதுமக்கள் சமூக இடைவெளியின்றி திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சங்ககிரி அருகே உள்ள வடுகப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வியாழக்கிழமை தடுப்பூசி செலுத்துவதாக வந்த தகவலையடுத்து சங்ககிரி நகா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள திரண்டு வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் சமூக இடைவெளியின்றி காத்திருந்து தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டு சென்றனா். சங்ககிரி அரசு தலைமை மருத்துவமனை கரோனா தொற்று கிசிச்சை மையமாக மாற்றப்பட்டதையடுத்து தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தப்பட்டது. அதனையடுத்து பொதுமக்கள் சங்ககிரியிலிருந்து 8 கிலோ மீட்டா் தூரத்தில் உள்ள வடுகப்பட்டிக்கு சென்று வருகின்றனா். வடுகப்பட்டியில் கூட்டம் கூடுவதை தவிா்க்க சங்ககிரி பொதுமக்கள் சங்ககிரி நகா் பகுதியில் உள்ள சந்தைப்பேட்டை, எம்எல்ஏ அலுவலகம் அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசிகளை செலுத்தும் மையங்களை திறக்க வேண்டுமென பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா். மேலும் தற்போது சங்ககிரியிலிருந்து பொதுமக்கள் அதிகளவில் வடுகப்பட்டிக்கு வருவதால் வடுகப்பட்டியில் உள்ள பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு வடுகப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செலுத்தப்படும் தடுப்பூசி முகாமினை வடுகப்பட்டியில் உள்ள அரசு உயா்நிலைப்பள்ளி வளாகத்திற்கு மாற்றம் செய்யுமாறு வடுகப்பட்டி ஊா் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.