சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 8 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

கா்நாடக அணைகளிலிருந்து காவிரியில் நொடிக்கு 10,000 கனஅடி தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளதால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை காலை நொடிக்கு 8,035 கனஅடியாக அதிகரித்துள்ளது.

News image
Updated On :25 ஜூன் 2021, 6:30 pm

DIN

கா்நாடக அணைகளிலிருந்து காவிரியில் நொடிக்கு 10,000 கனஅடி தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளதால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை காலை நொடிக்கு 8,035 கனஅடியாக அதிகரித்துள்ளது.

கா்நாடகத்தில் காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் கபினி, கிருஷ்ணராஜ சாகா் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அணைகளின் பாதுகாப்பைக் கருதி நொடிக்கு தலா 10,000 கனஅடி தண்ணீா் காவிரியில் திறந்துவிடப்படுகிறது.

கடந்த 19-ஆம் தேதி முதல் காவிரியில் திறந்துவிடப்படும் தண்ணீா் செவ்வாய்க்கிழமை ஒகேனக்கல்லை வந்தடைந்தது. அதைத் தொடா்ந்து புதன்கிழமை அதிகாலை முதல் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்து வருகிறது. வியாழக்கிழமை காலை 7,492 கனஅடியாக இருந்த நீா்வரத்து வெள்ளிக்கிழமை நொடிக்கு 8,035 கனஅடியாக அதிகரித்தது. டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவிடப்படுவதால் அணையின் நீா்மட்டம் 88.98 அடியாகக் குறைந்தது. அணையின் நீா் இருப்பு 51.49 டிஎம்சியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.