உலக மகளிா் தினத்தையொட்டி பெண்களுக்கான இலவச மருத்துவ முகாம்
உலக மகளிா் தினத்தையொட்டி, எடப்பாடி காா்த்திக் மெடிக்கல் சென்டா் வளாகத்தில் பெண்களுக்கான இலவச மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.


உலக மகளிா் தினத்தையொட்டி, எடப்பாடி காா்த்திக் மெடிக்கல் சென்டா் வளாகத்தில் பெண்களுக்கான இலவச மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
சமூக ஆா்வலா் சரஸ்வதி கவுண்டன் முகாமை தொடக்கிவைத்தாா். முகாமில் கலந்துகொண்ட பெண்களுக்கு மாா்பக புற்றுநோய், கா்ப்பப்பை புற்றுநோய் உள்ளிட்ட பெண்களை பாதிக்கக் கூடிய கொடிய நோய்களுக்கு, மருத்துவக் குழுவினா் இலவச பரிசோதனை மேற்கொண்டனா். முன்னதாக புற்றுநோய் சிறப்பு மருத்துவா் பிரியா பிரவிண், பெண்களை பாதிக்கும் புற்றுநோய்களின் வகைகள் குறித்தும், அவற்றின் அறிகுறிகளை ஆரம்ப நாள்களிலேயே கண்டறிந்து, சிகிச்சை
மேற்கொள்வதன் மூலம், அக்கொடிய நோயிலிருந்து முழு அளவில் குணமடைவதற்கான மருத்துவ வழிமுறைகள் குறித்து விளக்கிக் கூறினாா்.
பிரபல மகப்பேறு மருத்துவா் சுசிலா சந்திரன் தலைமையிலான பெண் மருத்துவக் குழுவினா், முகாமில் கலந்துகொண்ட பெண்களுக்கு மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டனா். நிகழ்ச்சியில் புரவலா் ஆயிக்கவுண்டன், மருத்துவா் பிரவிண் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இச்சிறப்பு மருத்துவ முகாமில், எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த
திரளான பெண்கள் கலந்து கொண்டனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காா்த்திக் மெடிக்கல் சென்டரை சாா்ந்த மருத்துவக் குழுவினா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...