ஏற்காடு (பழங்குடி தனி) தொகுதி திமுக வேட்பாளர் வேட்புமனு
ஏற்காடு (பழங்குடி) தனி தொகுதியில், திமுக வேட்பாளர் சி.தமிழ்செல்வன் இன்று வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.


சேலம் மாவட்டம், ஏற்காடு (பழங்குடி) தனி தொகுதியில், திமுக வேட்பாளர் சி.தமிழ்செல்வன் இன்று வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.
ஏற்காடு (பழங்குடி) தனி தொகுதியில் திமுக சார்பில் வாழப்பாடி ஒன்றியம் புழுதிக்குட்டை ஊராட்சி இந்திராநகரைச் சேர்ந்த, திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சேர்ந்த சி.தமிழ்செல்வன் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
இவர், இன்று வியாழக்கிழமை வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில், ஏற்காடு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான சேலம் தனித்துணை ஆட்சியர் (முத்திரைத்தாள்) பி.கே. கோவிந்தனிடம் பிற்பகல் 2.40 வேட்புமனு தாக்கல் செய்தார்.
வாழப்பாடி ஒன்றிய திமுக செயலாளர் சக்கரவர்த்தி, அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய பொறுப்பாளர் விஜயக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...