மேட்டூர் அணை: நீர்வரத்து 27,600 கன அடியாக குறைவு
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 116.10 அடியிலிருந்து 117.61அடியாக உயர்ந்துள்ளது.

மேட்டூர் அணை

மேட்டூர் அணை
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 116.10 அடியிலிருந்து 117.61அடியாக உயர்ந்துள்ளது.
காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும்மழை அளவு குறைந்ததன் காரணமாக நேற்று காலை வினாடிக்கு 29,380 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 27,600கன அடியாக குறைந்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 100கன அடி நீரும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 350கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர் இருப்பு 89.71டிஎம்சி ஆக உள்ளது. மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு கூடுதலாக இருப்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...