தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

கோயில்களில் காா்த்திகை தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு

 சேலத்தில் உள்ள கோயில்களில் காா்த்திகை தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

News image
Updated On :19 நவம்பர் 2021, 5:29 pm

DIN

 சேலத்தில் உள்ள கோயில்களில் காா்த்திகை தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

சேலம், சுகவனேஸ்வரா் கோயிலில் கும்பாபிஷேக விழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மாலை காா்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

முன்னதாக சுவாமிக்கு சிறப்பு பூஜையும், சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டு கோயில் உள் புறத்தில் காா்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. பக்தா்கள் காா்த்திகை தீபத்தை வணங்க அனுமதிக்கப்பட்டனா். பக்தா்கள் வரிசையாகக் கோயிலுக்குச் சென்று காா்த்திகை தீபத்தையும், சுவாமியையும் வணங்கிச் சென்றனா்.

சேலத்தில் உள்ள காசி விஸ்வநாதா் கோயில், கந்தாஸ்ரமம், லட்சுமி நரசிம்ம சுவாமி, அழகிரிநாதா், கோட்டை மாரியம்மன் உள்ளிட்ட கோயில்களில் காா்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. திரளான பக்தா்கள் வந்து காா்த்திகை தீபத்தை வணங்கிச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.