டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ராம்நாத் கோவிந்த் தலைமையில் பெரியார் பல்கலை மாணவர்கள் அரசியலமைப்பு சட்ட உறுதிமொழி ஏற்பு 

இந்திய அரசியலமைப்பு சட்ட தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

News image
ராம்நாத் கோவிந்த் தலைமையில் பெரியார் பல்கலை மாணவர்கள் அரசியலமைப்பு சட்ட உறுதிமொழி ஏற்பு
Updated On :28 ஜனவரி 2024, 5:33 am

DIN

இந்திய அரசியலமைப்பு சட்ட தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இந்நிகழ்வு நேரலையில் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஒளிபரப்பப்பட்டது. துணைவேந்தர் ஜெகநாதன், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

இந்திய அரசியலமைப்பு சட்ட நாள் விழா சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் இன்று கொண்டாடப்பட்டது. இந்திய அரசியலமைப்பு சட்ட தினத்தையொட்டி புது தில்லியில்  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்திய அரசியலமைப்பு சட்ட உறுதிமொழியை வாசித்தார். இந்த நிகழ்வு பெரியார் பல்கலைக்கழக ஆட்சிப் பேரவை கூட்டத்தில் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உறுதி மொழியை வாசிக்க நேரலையில், பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், தேர்வாணையர் கதிரவன் பேராசிரியர்கள் மாணவ, மாணவியர் இந்திய அரசியலமைப்பு சட்ட உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

அரசியலமைப்புச் சட்டத்தின் மீது முழு நம்பிக்கைக் கொண்டு அதன்படி நடப்போம் என உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்வில் பெரியார் பல்கலைக்கழக புல முதன்மையர்கள், துறைத் தலைவர்கள் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.