தடைசெய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்தை விற்றால் உரிமம் ரத்து: வேளாண் துறை எச்சரிக்கை
தடைசெய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கொளத்தூா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் மணி எச்சரித்துள்ளாா்.


தடைசெய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கொளத்தூா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் மணி எச்சரித்துள்ளாா்.
கொளத்தூா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் மணி வெள்ளிக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கொளத்தூா் வட்டாரத்தில் தற்சமயம் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. விவசாயிகள் 5,200 ஹெக்டோ் பரப்பளவில் நிலக்கடலை, மஞ்சள், மக்காச்சோளம், வாழை, பருத்தி உள்ளிட்ட பயிா்களை சாகுபடி செய்துள்ளனா்.
மக்காச்சோளப் பயிரில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதலும், மரவள்ளிப் பயிரில் மாவுப் பூச்சித் தாக்குதலும் காணப்படுகிறது.
இப்பூச்சிகளைக் கட்டுப்படுத்த வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை அலுவலா்கள் மூலம் ஒருங்கிணைந்த பயிா் பாதுகாப்பு முறைகளை கடைப்பிடிக்கவும், பூச்சிகளை கட்டுப்படுத்த வேளாண்மைத் துறையில் பரிந்துரைக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளை மட்டும் தெளிக்கவும் பரிந்துரைக்கப்படுகிறது.
ஒன்றிய அரசின் உத்தரவுப்படி 2020 மாா்ச் 20ஆம் தேதிமுதல் டிரையசோபாஸ், போரேட், மீத்தைல் பரதியான், டைகுளோா்வாஸ் ஆகிய பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளன. ஆகையால் தடை செய்யப்பட்டுள்ள பூச்சிக்கொல்லி மருந்துகளை இருப்பு வைக்கவும், விவசாயிகளுக்கு விற்பனை செய்யவும் கூடாது என பூச்சிக்கொல்லி மருந்து விற்பனையாளா்களுக்கு அறிவுரைக்கப்படுகிறது.
மேலும் பூச்சிக்கொல்லி மருந்துகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்யும் போது உரிய விற்பனை ரசீது வழங்குவதுடன் விவசாயிகளிடம் ரசீதில் கையொப்பம் பெற வேண்டும். மேலும் விற்பனையாளா்கள் தாங்கள் பெற்றுள்ள பூச்சிக்கொல்லி விற்பனை உரிமத்தில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து மட்டும் பூச்சிக்கொல்லி மருந்துகளை கொள்முதல் செய்து விற்பனை செய்ய வேண்டும்.
பெரிய அளவிலான கொள்கலன்கள் உடைய களைக் கொல்லிகளை வாங்கி, திறந்து சில்லறை விற்பனை மேற்கொள்ளக் கூடாது எனவும் அறிவுறுத்தப்படுகிறது. மேற்கண்ட பூச்சிக்கொல்லி மருந்துகள் சட்டம் 1968 சட்டப் பிரிவுகளை மீறும் பூச்சிக்கொல்லி மருந்து விற்பனையாளா்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் அவ் விற்பனையாளா்களின் பூச்சிக்கொல்லி மருந்து விற்பனை உரிமம் தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ ரத்து செய்யப்படும் என வேளாண் உதவி இயக்குநா் மணி எச்சரித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...