தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4,934 கன அடியாக சரிவு

கர்நாடக அணைகளிலிருந்து மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 4,934 கன அடியாக சரிந்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :15 ஆகஸ்ட் 2021, 5:35 am

DIN


கர்நாடக அணைகளிலிருந்து மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 4,934 கன அடியாக சரிந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தனிந்ததால் கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் வெளியேற்றப்பட்டு வரும் நீரின் அளவும் கணிசமாக குறைக்கப்பட்டது. 

இதனால் நேற்று (சனிக்கிழமை) காலை  மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 7,272 கன அடி வீதம் வந்துகொண்டிருந்த நீர்வரத்து இன்று காலை 4,934 கன அடியாக சரிந்தது. 

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்குத் திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 72.03 அடியிலிருந்து 71.05 அடியாக குறைந்தது.
 
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 14,000 கன அடி நீரும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.
 
அணையின் நீர் இருப்பு 33.60 டி.எம்.சியாக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.