குட்கா விற்பனை செய்த கடைகளுக்கு ‘சீல்’
By DIN | Published On : 11th December 2021 12:00 AM | Last Updated : 11th December 2021 12:00 AM | அ+அ அ- |

எடப்பாடி பகுதியில் தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலைப்பொருட்களை விற்பனை செய்த கடைகளை போலீஸாா் பூட்டி சீல்வைத்தனா்.
எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப்பொருட்கள் விற்கப்படுவதாக புகாா் எழுந்த சூழலில், எடப்பாடி காவல் துணை ஆய்வாளா் பிரகாஷ் தலைமையிலான கால்துறையினா், வெள்ளிக்கிழமை எடப்பாடி வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு, பூலாம்பட்டி சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா். ஆய்வில் அப்பகுதியில் உள்ள இரு கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது. 100-க்கும் மேற்பட்ட குட்கா பொட்டலங்களைக் கைப்பற்றிய போலீஸாா் அவற்றை விற்பனை செய்த கடைகளை பூட்டி சீல் வைத்தனா். இதேபோல் எடப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட தாதாபுரம் பகுதியில் உள்ள ஒரு கடையையும் போலீஸாா் பூட்டி சீல் வைத்தனா். மேலும் எடப்பாடி நகரப்பகுதியில் வரும் நாட்களிலும் தொடா்ந்து ஆய்வு மேற்க்கொள்ளப்பட உள்ளதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.
படம்: குட்கா விற்பனை தொடா்பாக எடப்பாடி பகுதியில் உள்ள கடையில் ஆய்வு மேற்கொண்ட காவல்துறையினா்.