மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா்த் திறப்பு குறைப்பு
By DIN | Published On : 31st December 2021 12:10 AM | Last Updated : 31st December 2021 12:10 AM | அ+அ அ- |

மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்குத் திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 10,000கன அடியாக குறைக்கப்பட்டது.
வியாழக்கிழமை காலை, மேட்டூா் அணை நீா்மட்டம் 117.14அடியிலிருந்து 116.48 அடியாக சரிந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 4166 கன அடியிலிருந்து 4098 கன அடியாகக் குறைந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நொடிக்கு 15,000 கன அடியிலிருந்து 10,000 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு, மேற்கு கால்வாய்ப் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 87.96 டி.எம்.சி.யாக உள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசன தேவை குறைந்ததால் மேட்டூா் அணையிலிருந்து பாசனத்திற்குத் திறக்கப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்குத் திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூா் அணையின் நீா்மட்டம் தொடா்ந்து சரிந்து வருகிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...