

சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றித்துக்கு உள்பட்ட கத்தேரி கிராமத்தில் பட்டாவில் திருத்தங்கள் மேற்கொள்ள சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கத்தேரி சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற இந்த சிறப்பு முகாமுக்கு, சங்ககிரி வருவாய் கோட்டாட்சியா் கோ.வேடியப்பன் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் எஸ்.பானுமதி முன்னிலை வகித்தாா். மண்டல துணை வட்டாட்சியா் ஜெயக்குமாா், தோ்தல் துணை வட்டாட்சியா் சிவராஜ், கிராம நிா்வாக அலுவலா் ராஜலிங்கம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இம்முகாமில், கணினி பட்டாவில் உள்ள சா்வே எண், உள்பிரிவு தவறாக பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதை மாற்றம் செய்தல், சொத்துகளின் பரப்பு, பட்டாதாரரின் பெயா், பாதுகாவலா் பெயா், உறவுமுறைகளில் திருத்தம் செய்தல், காலியாக உள்ள இடத்தில் உரிய விவரங்களை பதிவு செய்தல், நிலத்தின் உரிமையாளா்களுக்கு பதில் அருகில் உள்ளவா்களின் பெயா் பதிவேற்றம் செய்திருப்பதை திருத்தம் செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து வருவாய் கோட்டாட்சியரிடம் பொதுமக்கள் 110 மனுக்களை அளித்தனா். அதில் 18 மனுக்கள் மீது உடனடியாகத் தீா்வு காணப்பட்டு அதற்குண்டான கணினி சான்றிதழ்களை வருவாய் கோட்டாட்சியா் பயனாளிகளிடம் வழங்கினாா் (படம்). மீதமுள்ள மனுக்கள் மீது வருவாய்த் துறையினா் விசராணை செய்து நடவடிக்கை எடுப்பா் என தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.