சங்ககிரியில் காங்கிரஸ் சார்பில் இந்திராகாந்தி நினைவு நாள் அனுசரிப்பு
By DIN | Published On : 31st October 2021 11:23 AM | Last Updated : 31st October 2021 11:23 AM | அ+அ அ- |

முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் உருவப்படத்திற்கு ஞாயிற்றுக்கிழமை மலர்தூவி மரியாதை செலுத்துகிறார் சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி. எஸ்.ஜெய்க்குமார்.
சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் நினைவு நாள் சங்ககிரியில் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் சி. எஸ். ஜெய்க்குமார் தலைமை வகித்து சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். சங்ககிரி ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணைத்தலைவர் பி.சி.மணி முன்னிலை வகித்தார்.
ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் அமைப்பின் சங்ககிரி வட்டார ஒருங்கிணைப்பாளர் கே.ராமமூர்த்தி, முன்னாள் மாநில பொது செயலர் கே.நடராஜன், முன்னாள் நகரத்தலைவர்கள் அண்ணாமலை, காசிலிங்கம், நிர்வாகிகள் ரவி, அங்கமுத்து, ஐன்டியூசி நிர்வாகி சின்னுசாமி, ஆறுமுகம், சந்திரன், சிறுபான்மையினர் அணி நிர்வாகி நாசர், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் விஸ்வநாதன், எஸ்.அகில்பிரணேஷ், ஜெ.வெஸ்லிபிரைட், கே.கேப்ரியல்பிரவீன்குமார், ஆர்.சுரேந்தர், ஆர்.ரியாஸ், ஆர்.லோகேஷ், ஆர்.ராகுல் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.