நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து வாழப்பாடியில் எரிவாயு உருளை, இருசக்கர வாகனத்துக்கு மாலை அணிவித்து விறகு அடுப்பில் சமைத்து காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 5:27 pm

DIN

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து வாழப்பாடியில் எரிவாயு உருளை, இருசக்கர வாகனத்துக்கு மாலை அணிவித்து விறகு அடுப்பில் சமைத்து காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத் தலைவா் இராம.சுகந்தன் தலைமை வகித்தாா்.

பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினா். சேலம் கிழக்கு மாவட்ட துணைத் தலைவா் முனுசாமி, பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரத் தலைவா் தாண்டானூா் பழனி, முன்னாள் வட்டார காங்கிரஸ் தலைவா் பிரிதிவிராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவா் இராம.சுகந்தன் பேசுகையில், ‘பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.