பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோயிலில் தங்கத் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு 

வாழப்பாடி அருகே பிரசித்திபெற்ற பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற தங்கத் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர். 
பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோயிலில் தேரோட்டம்.
பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோயிலில் தேரோட்டம்.
Published on
Updated on
2 min read

வாழப்பாடி அருகே பிரசித்திபெற்ற பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற தங்கத் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர். 

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே 1,000 ஆண்டுகள் பழமையான வரலாற்று சிறப்புமிக்க தான்தோன்றீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. புனித நதியாக போற்றப்படும் வசிஷ்ட நதிக்கரையில் அமைந்துள்ள பஞ்ச பூத சிவன் திருத்தலங்களில் முதல் தலமான இக்கோயிலில், மக்களின் பங்களிப்போடு தங்கத்தேர் வடிவமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. கரோனா தொற்று பரவலால், கடந்த 3 ஆண்டுகளாக பக்தர்கள் தங்கத் தேரோட்டத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. 

இந்நிலையில், கரோனா பொதுமுடக்கம் முடிவுக்கு வந்தததால், தங்கத் தேரோட்டத்திற்கு கோயில் நிர்வாகம் அனுமதி வழங்கி வருகிறது. இதனைத் தொடர்ந்து, பிறந்தநாள் திருமண நாள் உள்ளிட்ட முக்கிய தினங்களில் கட்டணம் செலுத்தி, தங்கத் தேரோட்டம் நடத்துவதில் பக்தர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். வெள்ளிக்கிழமை இரவு வாழப்பாடி நெஸ்ட் அறக்கட்டளை தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து, பேளூரில் தங்கத் தேரோட்டம் நடத்தினர். 

இதில், வாழப்பாடி பேரூராட்சி மன்றத் தலைவர் கவிதா சக்கரவர்த்தி, துணைத் தலைவர் எம்ஜிஆர் பழனிசாமி, வட்டார மருத்துவ அலுவலர் சி. பொன்னம்பலம், நெஸ்ட் அறக்கட்டளை பெரியார்மன்னன், சாய்பாபா அறக்கட்டளை ஜவஹர், ஒன்றிய குழு உறுப்பினர் உழவன்முருகன், ஊர் கரக்காரர் ஞானசூரியன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கலைஞர்புகழ், தமிழ்நாடு ஊராட்சி பணியாளர்கள் சங்க மாநில பொருளாளர் மகேஸ்வரன், திமுக பிரமுகர்கள் இடையப்பட்டி பழனிமுத்து, புதூர் ஆனந்த், துளி இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜசேகரன், குழந்தைகள் வளர்ச்சித் திட்ட ஒருங்கிணைப்பாளர் கீர்த்திகா தேவி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, மூலவருக்கும், தங்கத்தேர் உற்சவருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் வழிபாடு நடைபெற்றது. நிறைவாக பக்தர்கள் அனைவருக்கும் சமபந்தி அன்னதானம் வழங்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com