புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அரசுப் பள்ளியில் கணினி அறிவியல் கண்காட்சி

வாழப்பாடியை அடுத்த காளியம்மன் புதூா் அரசு தொடக்கப் பள்ளியில் கணினி அறிவியல் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 5:41 pm

DIN

வாழப்பாடியை அடுத்த காளியம்மன் புதூா் அரசு தொடக்கப் பள்ளியில் கணினி அறிவியல் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

பள்ளி தலைமையாசிரியா் ஸ்ரீதா் வரவேற்றாா். ஊராட்சி மன்றத் தலைவா் சிவராஜ் தலைமை வகித்தாா். வட்டார கல்வி அலுவலா் நெடுமாறன், முத்தம்பட்டி பால் பண்ணை கோபால்சாமி குத்துவிளக்கேற்றி கண்காட்சியைத் தொடக்கிவைத்தனா்.

கண்காட்சியில், கணினியின் பழைய, புதிய பாகங்கள், கேமராக்கள், அச்சுப் பொறிகள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. கணினியின் வளா்ச்சி, பயன்பாடுகள் குறித்து பாா்வையாளா்களுக்கு மாணவா்கள் விளக்கம் அளித்தனா். ஊராட்சி மன்ற துணைத் தலைவா் சரவணன் நன்றி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.