தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

சேலம்: ஆத்தூர் கோட்டையில் 12 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் 

சேலம் மாவட்டம் ஆத்தூர் கோட்டை பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

News image
133 மூன்று ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட பழமை வாய்ந்த கோட்டை மேம்பாலத்தை பெரிய இயந்திரங்கள் மூலம் இடிக்கும் பணி நடைபெறுகிறது.
Updated On :1 பிப்ரவரி 2024, 9:07 am

DIN

சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் கோட்டை பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அதுமட்டுமன்றி இவ்வழியாக முல்லைவாடி, துலுக்கனூர், கல்லாநத்தம், முட்டல், உப்போடை  மற்றும் வடக்கு காடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் முக்கிய சாலையாகவும் உள்ளன,         

இந்த பாலம் ஆங்கிலேயர் காலத்தில் கருங்கற்களால் மிகப்பெரிய தூண்கள் அமைத்து 9 கண் கொண்ட மேம்பாலங்கள் கட்டப்பட்டது. மேலும் 1972 இல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 5 இரும்பு பாலங்கள் அடித்துச் சென்றன. அதே ஆண்டில் பழைய பாலத்துடன் இணைத்த 13 கண் கொண்ட பாலமாக விரிவாக்கம் செய்து மறு சீரமைக்கப்பட்டது. 

இந்நிலையில் தற்போது மேற்புற தல காங்கிரீட் தூண்களில் அதிகளவில் விரிசல் ஏற்பட்டு தடுப்பு கட்டைகள் பெரும்பாலும் வெடித்து சேதமடைந்தன. இதனால் மேம்பாலம் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் புதிதாக மேம்பாலம் அமைக்க 2020-21 ஆம் ஆண்டில் 12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தற்போது பாலம் கட்டுமான பணி தொடங்கி, அதனருகே வசிஷ்ட நதியில் தற்காலிக தரைப்பாலம் அமைக்கும் பணி நிறைவடைந்த நிலையில், 133 மூன்று ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட பழமை வாய்ந்த கோட்டை மேம்பாலத்தை பெரிய இயந்திரங்கள் மூலம் இடிக்கும் பணி இன்று முதல் தொடங்கியது. 

மேலும், அங்கு அமைக்கப்பட்ட தற்காலிக மாற்றுப்பாதையில் பொதுமக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.