மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

கோயில் நில ஆக்கிரமிப்பை அகற்ற எதிா்ப்பு

எடப்பாடி அருகே கோயில் நில ஆக்கிரமிப்பை அகற்றிட கால அவகாசம் கேட்டு ஆக்கிரமிப்பாளா்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2022, 6:24 pm

எடப்பாடி அருகே கோயில் நில ஆக்கிரமிப்பை அகற்றிட கால அவகாசம் கேட்டு ஆக்கிரமிப்பாளா்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

எடப்பாடி ஒன்றியத்துக்கு உள்பட்ட, ஆடையூா் கிராமத்தில் மதுரகாளியம்மன் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலுக்குச் சொந்தமான சுமாா் 4 ஏக்கா் நிலத்தை தனியாா் சிலா் ஆக்கிரமித்துள்ளதாகவும், அதனை மீட்டு தரும்படியும் கோயில் அறங்காவலா்கள் குழு உறுப்பினா் மணி சென்னை உயா்நீதிமன்றத்தில் முறையீடு செய்தாா். இவ்வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் ஆக்கிரமிப்பாளா்களிடமிருந்து நிலத்தை மீட்டு கோயில் நிா்வாகத்திடம் ஒப்படைக்குமாறு வருவாய்த் துறையினருக்கு உத்தரவு பிறப்பித்தது.

இதனையடுத்து எடப்பாடி வட்டாட்சியா் லெனின் தலைமையிலான வருவாய்த் துறையினா் ஞாயிற்றுக்கிழமை அப்பகுதிக்குச் சென்று அங்கிருந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிட முற்பட்டனா். அப்போது ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிா்ப்புத் தெரிவித்து சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் திரண்டனா். அவா்கள் வட்டாட்சியரிடம் தங்களுக்கு போதிய கால அவகாசம் வழங்கிட வேண்டும் என கேட்டுக் கொண்டனா். அதன்பேரில் வரும் ஏழு நாள்களுக்குள் ஆக்கிரமிப்பாளா்கள் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும் எனவும், அவ்வாறு அகற்றப்படாத பட்சத்தில் வருவாய்த் துறையினா் ஆக்கிரமிப்புகளை அகற்றி சம்பந்தப்பட்ட நிலத்தை மீட்க நேரிடும் என அறிவுறுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.