பெட்ரோல் திருடியதாக வடமாநில இளைஞர் மீது தாக்குதல்

சேலம் மாவட்ட வீரபாண்டி அருகே பெட்ரோல் திருடியதாக  வட மாநில இளைஞரை கட்டி வைத்து சரமாரியாக தாக்கிய பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
பெட்ரோல் திருடியதாக வடமாநில இளைஞர் மீது தாக்குதல்
பெட்ரோல் திருடியதாக வடமாநில இளைஞர் மீது தாக்குதல்
Updated on
1 min read

சேலம்: சேலம் மாவட்ட வீரபாண்டி அருகே பெட்ரோல் திருடியதாக  வட மாநில இளைஞரை கட்டி வைத்து சரமாரியாக தாக்கிய பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

மக்கள் தாக்கியதில், இளைஞருக்கு வலிப்பு வந்த போதும் விடாமல் வேடிக்கை பார்த்த அவலம் நடந்தேறியிருக்கிறது.

பொதுவாக தமிழக முழுவதும் வட மாநில இளைஞர்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புதிதாக தொழில் தொடங்கவும் கூலி வேலைக்காகவும் வட மாநில இளைஞர்கள் தமிழகத்தை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் வட இந்தியர்கள் இல்லாத இடமே இல்லை என்ற அளவுக்கு பிகார், மகாராஷ்டிரம், உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் அனைத்து மாவட்டங்களிலும் குடியேறி உள்ளனர்.

இந்த நிலையில், சேலம் மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள சின்னசீரகாப்பாடி பகுதியில் பெட்ரோல் திருடியதாக வட மாநில இளைஞரை ஒருவரை பொதுமக்கள் கட்டி வைத்து சாலை ஓரத்தில் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தனியாக நிறுத்தப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்களில் பெட்ரோல் திருடி விற்பனை செய்வதாக அந்த இளைஞர் மீது சந்தேகப்பட்ட பொதுமக்கள் அவரைப் பிடித்து கை, கால்களைக் கட்டி கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் அவருக்கு திடீரென வலிப்பு ஏற்படவே அதையும் பொருட்படுத்தாமல் வேடிக்கை பார்த்ததோடு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் கிடைத்ததன் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் இளைஞரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.  இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது குறித்த விடியோ வைரலாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com