எடப்பாடி அருகே கோயில் நிலங்கள் மீட்பு குறித்து ஆய்வு
எடப்பாடி சுற்றுவட்டாரப்பகுதிகளில் இந்துசமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின்கீழ் உள்ள கோயில்களுக்குச் சொந்தமான, ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை மீட்கும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது.


எடப்பாடி சுற்றுவட்டாரப்பகுதிகளில் இந்துசமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின்கீழ் உள்ள கோயில்களுக்குச் சொந்தமான, ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை மீட்கும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது.
வியாழக்கிழமை எடப்பாடியை அடுத்த செட்டிமாங்குறிச்சி கிராமத்தில் உள்ள கோட்டைமேடு உலகநாத ஈஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான விவசாய நிலங்களை மீட்பது குறித்த ஆய்வுப் பணி நடைபெற்றது. இதில் திருத்தொண்டா் சபை நிறுவனா் அல்லிகுட்டை ராதாகிருஷ்ணன், எடப்பாடி வட்டாட்சியா் விமல்பிரகாஷ், இந்துசமய அறநிலையத் துறை அலுவலா்கள் சம்பந்தப்பட்ட கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை பா ா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
தொடா்ந்து பத்தாவது முறையாக எடப்பாடி சுற்றுவட்டாரப்பகுதியில் கோயில் நிலங்கள் மீட்பது குறித்து ஆய்வுப்பணிகள் நடைபெற்றுள்ள நிலையில் ஆக்கிரமிப்பில் உள்ள விரைவில் சம்மந்தப்பட்ட கோயிலின் நிலங்கள் மீட்கப்படும் என ஆய்வுக்குழுவினா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...