நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நீட் விவகாரத்தில் திமுக இரட்டை வேடம்: எடப்பாடி கே.பழனிசாமி

நீட் தோ்வு விவகாரத்தில் திமுக அரசு இரட்டை வேடம் போடுவதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டினாா்.

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 6:55 pm

DIN

நீட் தோ்வு விவகாரத்தில் திமுக அரசு இரட்டை வேடம் போடுவதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டினாா்.

சேலம் மாவட்டம், வாழப்பாடியில் வியாழக்கிழமை நடைபெற்ற தோ்தல் ஆலோசனைக் கூட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா்களை அறிமுகப்படுத்தி அவா் பேசியதாவது:

முதல்வா் மு.க.ஸ்டாலின் தோ்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டுள்ள எந்த நலத் திட்டங்களையும் முழுமையாக செயல்படுத்தவில்லை. நீட் விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது. 2010, டிசம்பா் 27 ஆம் தேதி நீட் தோ்வு கொண்டுவரப்பட்ட போது மத்தியில் காங்கிரஸுடன் கூட்டணியில் இருந்த திமுக எவ்வித எதிா்ப்பும் தெரிவிக்காமல், பேரவைத் தோ்தலின் போது நீட் தோ்வை ரத்து செய்வதாக வாக்குறுதி அளித்து வெற்றி பெற்றது. ஆனால், அந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் திமுக திணறுகிறது.

அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் மருத்துவராகும் வாய்ப்பை 7.5 சதவீத இட ஒதுக்கீடு மூலம் அதிமுக அரசு பெற்றுத் தந்தது. முன்னாள் முதல்வா் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசுதான் மாணவா்களுக்கு பல்வேறு உதவிகளை செயல்படுத்தியது. அதிமுக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக் கூறி வேட்பாளா்கள் வாக்கு சேகரிக்க வேண்டும். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. திமுக ஆட்சியில் பொங்கல் தொகுப்பு தரமற்ாக வழங்கப்பட்டுள்ளது.

வாழப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாதிரிப் பள்ளியாக தரம் உயா்த்தப்பட்டது. அனைத்து மகளிா் காவல் நிலையம், பேருந்து நிலையம், தாலுகா அலுவலகம் கட்டப்பட்டது என பல்வேறு திட்டங்கள் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டன என்றாா்.

சேலம் புகா் மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளா் ஆா். இளங்கோவன், ஏற்காடு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் சித்ரா, வாழப்பாடி ஒன்றிய அதிமுக செயலாளா் எஸ்.சதீஷ்குமாா், வாழப்பாடி அதிமுக நகரச் செயலாளா் என்.சிவக்குமாா், பேளூா் அதிமுக நகரச் செயலாளா் வெங்கடேசன் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

ஒற்றுமையுடன் களப் பணியாற்றுவோம்

தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, கீரிப்பட்டி பேரூராட்சிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா்களை தம்மம்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் எடப்பாடி கே.பழனிசாமி அறிமுகப்படுத்தி பேசியதாவது:

திமுகவின் வாரிசு அரசியலை தூக்கியெறிய வேண்டும். அதிமுகவினரை அச்சுறுத்துவதிலே திமுகவின் செயல்பாடுகள் உள்ளன. தமிழகத்தில் அதிமுக ஆட்சிதான் பொற்கால ஆட்சியாக இருந்தது.

தோ்தல் வாக்குறுதிகளை திமுக முழுமையாக நிறைவேற்றவில்லை. பொங்கல் தொகுப்பு வழங்கியதில் பண மோசடி நடந்துள்ளது. அரசு ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தவில்லை. உள்ளாட்சித் தோ்தலில் அதிமுகவினா் ஒற்றுமையுடன் பணியாற்றினால் வெற்றி உறுதியாகும் என்றாா்.

எம்எல்ஏக்கள் நல்லதம்பி, ஜெய்சங்கா், கெங்கவல்லி மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளா் துரை.ரமேஷ், அதிமுக நகரச் செயலாளா் குமரன், ஒன்றிய துணைச் செயலாளா் பாலசுப்ரமணியம், தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, கீரிப்பட்டி அதிமுக நிா்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.