எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர் போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிபங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

கொங்கணாபுரத்தில் பருத்தி ரூ. 2.10 கோடிக்கு விற்பனை

கொங்கணாபுரம் வேளாண் கூட்டுறவு விற்பனை மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ. 2.10 கோடிக்கு பருத்தி மூட்டைகள் ஏலம் போனது.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 6:29 pm

DIN

கொங்கணாபுரம் வேளாண் கூட்டுறவு விற்பனை மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ. 2.10 கோடிக்கு பருத்தி மூட்டைகள் ஏலம் போனது.

இம்மையத்தில் வாரந்தோறும் வெள்ளி, சனிக்கிழமைகளில் பருத்தி, நிலக்கடலை, எள், கொப்பரைத் தேங்காய் ஆகியவற்றுக்கு ஏலம் நடைபெறுகிறது. நிகழ்வாரம் விவசாயிகள் கொண்டுவந்த சுமாா் 5,000 பருத்தி மூட்டைகள் 900 லாட்டுகளாக பிரிக்கப்பட்டு ஏலம் விடப்பட்டது. இதில் பி.டி. ரக பருத்தி குவிண்டால் ஒன்று ரூ. 9,700 முதல் ரூ. 11,150 வரைக்கும், டி.சி.ஹெச் ரக பருத்தி குவிண்டால் ஒன்று ரூ. 10,050 முதல் ரூ. 12,799 வரைக்கும் விலைபோனது. மொத்தம் ரூ. 2 கோடியே 10 லட்சத்துக்கு பருத்தி மூட்டைகள் விற்பனையாகின. சனிக்கிழமையும் பருத்தி ஏலம் நடைபெறவுள்ளது. நிகழ்வாரம் ஏலத்துக்கு 110 மூட்டை கொப்பரைத் தேங்காய் கொண்டு வரப்பட்டிருந்தன.

அவை 40 லாட்டுகளாகப் பிரிக்கப்பட்டு பொது ஏலம் விடப்பட்டது. இதில் முதல் தரம் கிலோ ரூ. 81. 65 காசு முதல் ரூ. 88. 35 காசு வரை விற்பனையானது. இரண்டாம் தரம் ரூ. 66.40 காசு முதல் ரூ. 80. 85 காசு வரை விற்பனையானது. பொது ஏலத்தின் மூலம் ரூ. 4 லட்சம் வரை கொப்பரைத் தேங்காய் விற்பனையானது. கொப்பரைத் தேங்காய்க்கு அடுத்த ஏலம் பிப். 18- ஆம் தேதி நடைபெறும் என கூட்டுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.