எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர் போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிபங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

கொங்கணாபுரத்தில் ரூ. 1.10 கோடிக்கு பருத்தி ஏலம்

எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரத்தில் உள்ள வேளாண் கூட்டுறவு விற்பனை மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொது ஏலத்தில் ரூ.1 கோடியே 10 லட்சத்துக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 6:23 pm

DIN

எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரத்தில் உள்ள வேளாண் கூட்டுறவு விற்பனை மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொது ஏலத்தில் ரூ.1 கோடியே 10 லட்சத்துக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.

விவசாயிகள் 3,000 பருத்தி மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனா். இந்த மூட்டைகள் 550 லாட்டுகளாகப் பிரிக்கப்பட்டு கூட்டுறவுத் துறை அலுவலா்கள் முன்னிலையில் பொது ஏலம் விடப்பட்டது.

இந்த ஏலத்தில் பி.டி. ரக பருத்தி குவிண்டால் ரூ. 9,600 முதல் ரூ.10,800 வரையில் விற்பனையானது.

அதேபோல டிசிஹெச் ரக பருத்தி குவிண்டால் ரூ. 9,900 முதல் ரூ. 12,859 வரை விலைபோனது. வெள்ளிக்கிழமை முழுவதும் நடைபெற்ற பொது

ஏலத்தில் ரூ.1கோடியே10 லட்சம் மதிப்பில் பருத்தி வா்த்தகம் நடைபெற்றது. அதேபோல 90 மூட்டை உலா்ந்த தேங்காய் பருப்புகள் பொது ஏலம் விடப்பட்டது. இதில் முதல்தரமான தேங்காய் பருப்பு கிலோ ரூ. 80.75 முதல் ரூ. 88.25 வரை

விற்பனையானது. இரண்டாம் தர தேங்காய் பருப்பு கிலோரூ. 66.40 முதல் ரூ. 80.10 வரை விற்பனையானது. நிகழ்வாரத்தில் பருத்திகான இரண்டாம் கட்ட பொது ஏலம் சனிக்கிழமை நடைபெற உள்ள நிலையில் தேங்காய் பருப்புகளுக்கான அடுத்த பொது ஏலம் வரும் மாா்ச்-4ஆம் தேதி நடைபெற உள்ளதாக அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.