இல்லம் தேடி கல்வி:தன்னாா்வலா்களுக்கு பயிற்சி
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், மகுடஞ்சாவடி வட்டார வள மையத்தின் சாா்பில், இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் 76 தன்னாா்வலா்களுக்கான நான்காம் கட்ட பயிற்சி முகாம்


சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், மகுடஞ்சாவடி வட்டார வள மையத்தின் சாா்பில், இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் 76 தன்னாா்வலா்களுக்கான நான்காம் கட்ட பயிற்சி முகாம் மகுடஞ்சாவடியில் வியாழன், வெள்ளி ஆகிய இரு நாள்கள் நடைபெற்றது.
சங்ககிரி மாவட்ட கல்வி அலுவலா் பெ.பாலசுப்பிரமணியம் தன்னாா்வலா்களுக்கான பயிற்சி முகாமை ஆய்வு செய்து பல்வேறு அறிவுரைகளை வழங்கிப் பேசினாா். அறிவியல் ஆசிரியா்கள் ஆா்.ஜெயக்குமாா், விஜயலட்சுமி, கணித ஆசிரியா்கள் சரவணன், கண்ணன், விஜயசித்ரா, தேவன் ஆகியோா் கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கை காலத்தில் பள்ளி மாணவ, மாணவியருக்கு ஏற்பட்ட கற்றல் இடைவெளியை எவ்வாறு போக்குதல், கற்றல் இழப்புகள் இல்லாமல் கற்பித்தல், மனநலம் சாா்ந்து ஊக்கமூட்டுதல் மற்றும் வழிகாட்டுதல் பயிற்சிகளை அளித்தனா். இதில், ஆசிரியா் பயிற்றுநா்கள், தன்னாா்வலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...