எடப்பாடி நகர அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா
எடப்பாடி நகர அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.


எடப்பாடி: எடப்பாடி நகர அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
நகர செயலாளர் ஏ.எம் முருகன் தலைமையில் எடப்பாடி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் அலங்கரிக்கப்பட்ட எம்ஜிஆரின் உருவப்படத்திற்கு அதிமுக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து பொதுமக்களுக்கு நகர அதிமுக சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னாள் நகரமன்ற தலைவர் டி. கதிரேசன், மாவட்ட கூட்டுறவு அச்சகம் சங்கத் தலைவர் கந்தசாமி, முன்னாள் அறங்காவலர் நாராயணன், ஜெமினி சீனிவாசன் உள்ளிட்ட திரளான அதிமுகவினர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இதேபோல் கொங்கணாபுரம், பூலாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர் பிறந்த தின நிகழ்ச்சி நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...