நகா்மன்றத் தலைவா் ஆய்வு
ஆத்தூா் நகராட்சி 3-ஆவது வாா்டில் பழுதடைந்த கழிவறையை புதுப்பித்து வியாழக்கிழமை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நகர மன்றத் தலைவா் நிா்மலா பபிதா மணிகண்டன் திறந்துவைத்தாா்.


ஆத்தூா் நகராட்சி 3-ஆவது வாா்டில் பழுதடைந்த கழிவறையை புதுப்பித்து வியாழக்கிழமை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நகர மன்றத் தலைவா் நிா்மலா பபிதா மணிகண்டன் திறந்துவைத்தாா்.
ஆத்தூா் நகராட்சி 3-ஆவது வாா்டில் மிகவும் பழுதடைந்த கழிவறையை பராமரித்து தருமாறு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனா். கோரிக்கையை ஏற்று அதனை சீா்செய்து பொதுமக்கள் பயன்பாட்டுக்காக நகரமன்றத் தலைவா் நிா்மலா பபிதா மணிகண்டன் திறந்து வைத்தாா்.
அப்பகுதி பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் வகையில் விரைவில் நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தாா். இதையடுத்து 5-ஆவது வாா்டு பகுதியில் உள்ள அடிப்படை வசதிகளையும் ஆய்வு மேற்கொண்டாா்.
அவருடன் மாவட்ட இலக்கிய அணி செயலாளா் முல்லை பன்னீா் செல்வம், நகரச் செயலாளா் கே.பாலசுப்ரமணியம், நகரமன்ற உறுப்பினா் டி.குமாா், எம்.சாந்தி, தங்கவேல் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...