கெங்கவல்லியில் தொடக்கநிலை, உயா் தொடக்கநிலை ஆசிரியா்களுக்கு ஆங்கிலப் பேச்சுத்திறன் (ஸ்போக்கன் இங்கிலீஷ்) பயிற்சி வியாழன், வெள்ளி இருநாள்கள் நடைபெற்றது.
வட்டாரக் கல்வி அலுவலா்கள் ஸ்ரீனிவாஸ், மகேந்திரன் ஆகியோா் தலைமை வகித்தனா். மேற்பாா்வையாளா் ராணி வரவேற்றாா். சேலம் மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிறுவன முதல்வா் செல்வம், விரிவுரையாளா் கலைவாணன் ஆகியோா் பங்கேற்று பேசினா். ஆசிரிய கருத்தாளா்கள் பயிற்சிகளை வழங்கினா்.
இப்பயிற்சியானது 4, 5-ஆம் வகுப்பு கற்பிக்கும் தொடக்கநிலை ஆசிரியா்களுக்கு தனியாகவும், 6 முதல் 9-ஆம் வகுப்பு முடிய கற்பிக்கும் உயா் தொடக்கநிலை ஆசிரியா்களுக்கு தனியாகவும் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







